வகைப்படுத்தப்படாத

கிரீஸில் ஏற்பட்ட காட்டு தீ விபத்தில் சிக்கி 20 பேர் பலி

(UTV|GREECE)-கிரீஸில் பரவியுள்ள காட்டுத்தீயால் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம் அதிகாரிகள், சர்வதேச ரீதியான உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகின்றது.

கிரீஸ் தலைநகர் ஏதேனஸிற்கு அருகில் ஏற்பட்டுள்ள இந்தக் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ள அதேநேரம், அங்குள்ள வீடுகளிலிருந்து மக்கள் வௌியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், தீயைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு எம்மால் முடிந்தவற்றை செய்வோம் என பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் தெரிவித்துள்ளார்.

ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளதை, அரச பேச்சாளர் டிமிட்ரிஸ் ஸானகொபௌலொஸ் உறுதிசெய்துள்ளார்.

அதேநேரம், 16 சிறுவர்கள் உட்பட 104க்கும் அதிகமானோர் இதில் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 11 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதெனவும் அரச பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பெல்ஜியம் நாட்டின் பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு

ஜப்பான் வர்த்தக கைத்தொழில் சபை பிரதிநிதிகள் குழு – ஜனாதிபதி சந்திப்பு

நான்கு வாள்களுடன் ஒருவர் கைது