விளையாட்டு

கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா – அறிவிக்க மறுக்கும் நிர்வாகம்

(UTV | தென்னாப்பிரிக்கா) – தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியினருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் இருவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியினர் சில நாட்களுக்கு முன்பாக பயிற்சியை மேற்கொண்டனர். இதையடுத்து அணி வீரர்கள் உள்ளிட்ட 50 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் இருவருக்கு மட்டும் கொரோனா இருப்பது உறுதியானது. அந்த இரண்டு வீரர்கள் யார் என்ற விவரத்தையும் தென்னாப்பிரிக்க அணி நிர்வாகம் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

டென்னிஸ்: 3-வது சுற்றில் பெடரர், செரீனா

மகளிர் கால்பந்தாட்ட சுற்றுத்தொடரில் இலங்கை அணியும் பங்கேற்பு

மீண்டும் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ்