உள்நாடுவிளையாட்டு

கிரிக்கெட் வீரர்களின் கொடுப்பனவுகள் அதிரடியாக உயர்வு!

அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலுக்குமான இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

அதன்படி, டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் போட்டிக் கட்டணம் 100% உயர்த்தப்பட்டு, அவர்களின் ஆட்டத்திறனுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படவுள்ளது.

ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் வெற்றி, சமநிலை அல்லது தோல்வி என்பதைப் பொறுத்து கட்டண முறைகள் மாறுபடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சனல் 4 விவகாரம் தொடர்பில் ஏற்படவுள்ள நிலை – உதய கம்மன்பில.

சர்வதேச தரப்படுத்தலில், இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு 19வது இடம்

எரிபொருள் நெருக்கடி : மற்றுமொருவர் பலி