உலகம்விளையாட்டு

கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்கவுக்கு பிடியாணை

ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்கு நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்கவிற்கு மாத்தளை மேல் நீதிமன்றம் இன்று (08) பிடியாணை பிறப்பித்துள்ளது.

பல்லேகல மைதானத்தில் இவ்வருடம் மார்ச் மாதம் நிறைவடைந்த “லெஜண்ட்ஸ் லீக்” என்ற கிரிக்கெட் போட்டித்தொடரின் போது பணத்திற்கு ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுமாறு தனக்கு அழுத்தும் கொடுக்கப்பட்டதாக உபுல் தரங்க செய்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணையில் உள்ள வழக்கொன்றிற்கு உபுல் தரங்க நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தால் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்திற்கு அறிவிக்காமல் உபுல் தரங்க வெளிநாடு சென்ற காரணத்தினால் விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் வெளிநாட்டில் உள்ளதால், நாடு திரும்பிய பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராவதாக சீராக்கல் மனு ஊடாக நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

104 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை அணி

கொவிட் – 19 :உலகளவில் பலி எண்ணிக்கை 1 இலட்சத்து 90 ஆயிரத்தை கடந்தது

12 மாதங்களைத் தொட்ட காசா போரில் உயிரிழப்பு 41,000 ஐ நெருங்கியது.

editor