சூடான செய்திகள் 1

‘கிராமங்களை உருவாக்குவோம்’ முதலாவது வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-போதைப்பொருட்களற்ற நாடு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ‘கிராமங்களை உருவாக்குவோம்’ கிராமிய செயற்திட்டத்தின் முதலாவது வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

எம்பிலிபிட்டிய மகாவலி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் சமூக பொலிஸ் குழுக்களின் பிரதிநிதிகள், பாதுகாப்பு பிரிவுகளின் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளவுள்ளனர்.

இதன்போது ‘போதைப்பொருட்களற்ற கிராமம்’ எனும் தொனிப்பொருளில் அமைந்த பாடசாலை மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

 

அமைதியான தேசத்தை கட்டியெழுப்புவதற்காக கிராம மக்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் செயற்படுத்தப்படும் ‘கிராமங்களை உருவாக்குவோம்’ கிராமிய போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தின் கீழ் இலங்கையின் சகல கிராமங்களிலும் சமூக பொலிஸ் குழுக்களை அடிப்படையாகக் கொண்ட போதைப்பொருள் தேடல்கள், புனர்வாழ்வு அளித்தல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

கிராமங்களில் சட்ட விரோத போதைப்பொருள் விற்பனை மற்றும் உற்பத்தியை இல்லாதொழிப்பதற்கான நிலையான முறையொன்றினை தயாரித்தல், கிராமத்தவர்களின் ஒத்துழைப்புடன் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தல், அத்தகைய கைத்தொழில்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு வேறு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தலும் மேற்பார்வை செய்தலும், கிராமங்களிலுள்ள போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான வழிகாட்டல்களையும் உதவிகளையும் வழங்குதல், கிராமிய மட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல், கிராமத்தின் இளம் சமுதாயத்தினரையும் பாடசாலை மாணவர்களையும் இலக்காக கொண்டு போதைப்பொருள் பாவனையினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பாக தெளிவுபடுத்தல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் இச்செயற்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தீவிரவாதத் தாக்குததாரியான சஹ்ரானின் மனைவி, குழந்தை அடையாளம் காணப்பட்டுள்ளனர்

பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர் முறை தொடர்ந்தும் அமுல்

25ம் திகதி வரை விஷேட பஸ் சேவை