உள்நாடு

கிரான்பாஸ் தீ விபத்து : 50 வீடுகள் தீக்கிரை

(UTV | கொழும்பு) – கொழும்பு, கிரான்பாஸ் கஜீமா தோட்டத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் பல வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை 2.40 மணியளவில் இந்த தீவிபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்தில் அப்பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த 50 வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்தில் எவ்வித உயிராபத்துக்களும் இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் கிரான்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் – புகையிரத நிலைய அதிபர் சங்கம் தீர்மானம்.

சுகாதார பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில்

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த முடியவில்லை – டக்ளஸ் தேவானந்தா .