வகைப்படுத்தப்படாத

கிராண்ட்பாஸ் கட்டிட விபத்து; நிர்மாணப் பணிகளை மேற்கொண்ட நிறுவனத்தின் உரிமையாளர் பொலிஸில் சரண்

(UTV|COLOMBO)-கொழும்பு, கிராண்பாஸ் பகுதியில் நேற்று கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பம் தொடர்பில், ஒருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இடிந்து விழுந்த கட்டிடத்தின் புனர்நிர்மாணப் பணிகளை மேற்கொண்ட நிறுவனத்தின் உரிமையாளரே இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கிராண்பாஸ் பகுதியில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 07 பேர் உயிரிழந்ததுடன், மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்து பொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறினார்.

படுகாயமடைந்த பெண் ஒருவரின் ஒரு கால் நேற்று இரவு சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் நான்கு பெண்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிராண்பாஸ் பபாபுள்ளே மாவத்தையில் தேயிலை களஞ்சியப்படுத்தி வைக்கும் பழமையான கட்டிடம் ஒன்றே நேற்று பிற்பகல் 03.00 மணியளவில் இடிந்து விழுந்தது.

இந்த விபத்து இடம்பெற்ற போது குறித்த கட்டிடத்திற்குள் சுமார் 20 இற்கும் அதிமானவர்கள் பணிகளில் ஈடுபட்டிருந்ததாக விபத்தில் இருந்து தப்பிய சக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மட்டகளப்பு-ஏறாவூர் நகர சபை உத்தியோகபூர்வ முடிவுகள்!

ව්‍යාජ අමරිකානු මුදල් සමඟ සැකකරුවෙක් අත්අඩංගුවට

Corruption case against Wimal fixed for Aug. 08