வகைப்படுத்தப்படாத

கியூபா நாட்டு புதிய அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு

(UTV|KIYUBA)-அமெரிக்காவிற்கு அருகில் உள்ள மிகச்சிறிய தீவு நாடு கியூபா. இது கரீபியன் கடலில் அமைந்துள்ளது. கம்யூனிஸ்ட் ஆட்சியின் இருக்கும் இந்நாட்டில் மறைந்த புரட்சியாளரான பிடல் காஸ்ட்ரோ சுமார் 30 ஆண்டுகள் பிரதமர் மற்றும் அதிபராக இருந்தார். அவருக்கு பின் அவருடைய சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ சுமார் 10 ஆண்டுகளாக அதிபர் பதவியில் உள்ளார். 87 வயதான ரவுல் பதவியிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார்.

இதையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், துணை அதிபரான மிக்வெல் டயாஸ் அதிபர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து எந்த வேட்பாளரும் நிறுத்தப்படவில்லை. எனவே, மிக்வெல் டயாஸ் கனல் போட்டியின்றி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுமார் 40 ஆண்டுகளாக காஸ்ட்ரோ குடும்பத்தினர் அதிபராக இருந்த நிலையில், அந்த குடும்பத்தைச் சேராத ஒருவர் அதிபர் பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ரவுல் காஸ்ட்ரோ அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும், கட்சியில் தலைமை பதவி மற்றும் முக்கிய பதவிகளில் இருப்பார் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜனாதிபதி ரஷ்யா பயணம்

Rishad Bathiudeen reassumes duties as Cabinet Minister of several key Ministries

தான்சானியா நாட்டில் படகு கவிழ்ந்து விபத்தில் 44 பேர் பலி