உள்நாடு

கிண்ணியா விபத்து: தலைமறைவான சந்தேகநபர்களை தேடி பொலிசார் விசாரணை

(UTV | கொழும்பு) – திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் விபத்துக்குள்ளான மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலத்தை இயக்கியவர்கள், பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவர்களைக் கைது செய்வதற்காக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸ் தெரிவிக்கின்றது.

இதேநேரம், கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில், நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு இன்று கூடி, விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலம் நேற்றுக் காலை விபத்துக்குள்ளானதில், 4 மாணவர்கள் உட்பட ஆறு பேர் மரணித்தமையும் குறிப்பிடத்தக்கது.

    

Related posts

அரசாங்கத்தில் திருட்டு இல்லாததால் கல்வித் தகுதியை தேடுகின்றனர் – பிரதமர் ஹரிணி

editor

பாகிஸ்தான் விமானப்படை தளபதி இலங்கை விஜயம்

இரு நிபந்தனைகளுக்கு இணங்கினால் வேட்புமனுவை மீளப் பெறத் தயார் – அநுர