உள்நாடு

கிண்ணியா நகர சபை தவிசாளர் மீள விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) –  திருகோணமலை – குறிஞ்சாக்கேணியில் மிதப்பு பாலம் கவிழ்ந்து 8 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம் நலீம் மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு இன்று திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கிய குற்றச்சாட்டின் பேரிலும் அனர்த்தம் இடம்பெற உடந்தையாக இருந்தார் என தெரிவித்தும் கிண்ணியா நகர சபை தவிசாளர் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் ஏலவே, கைதான குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலத்தின் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை – குறிஞ்சாக்கேணி பகுதியில் கடந்த மாதம் 23 ஆம் திகதி மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் 4 மாணவர்கள் உட்பட அறுவர் அதே தினத்தில் பலியாகினர்.

Related posts

சஜித், அநுரகுமார ஒன்றாக – புகைப்படங்கள்

சீரற்ற வானிலை – மேலும் சில பாடசாலைகளை மூட தீர்மானம்

editor

ஊரடங்கு எதற்காக?