உள்நாடு

கிண்ணியா நகர சபை தவிசாளர் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – திருகோணமலை – குறிஞ்சாக்கேணியில் மிதப்பு பாலம் கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம் நலீம் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைதானவர் திருகோணமலை நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்துவதற்காக இன்று பிற்பகல் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை – குறிஞ்சாக்கேணி பகுதியில் மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலம் நேற்று முன்தினம் கவிழ்ந்ததில் 4 மாணவர்கள் உட்பட அறுவர் பலியாகினர்.

இந்தச் சம்பவத்தை மையப்படுத்தி கிண்ணியா நகர சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் மிதப்பு பால உரிமையாளர் உட்பட மூவர் நேற்று கைது செய்யப்பட்டு, திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆபத்து நிறைந்த மரங்களை அகற்ற நடவடிக்கை

திங்கள் முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க பரிந்துரை

ரணில் விக்கிரமசிங்க CID இல் வாக்குமூலம்