சூடான செய்திகள் 1

கிண்ணியாவில் ஏற்பட்ட அமைதியின்மையில் ஒருவர் உயிரிழப்பு; கடற்படையினர் 12 பேர் காயம்

(UTV|COLOMBO)-திருகோணமலை – கிண்ணியா, கண்டல்காடு பகுதியில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது கற்களால் தாக்கப்பட்ட கடற்படையின் 12 உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர்.

சுற்றிவளைப்பின் போது தப்பிச்சென்று காணாமற்போயிருந்த மூவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

கண்டல்காடு பாலத்திற்கு அருகில் பாதுகாப்புப் பிரிவினருக்கும் மக்களுக்கும் இடையில் இன்று காலை அமைதியின்மை ஏற்பட்டது. இதன்போது, நடத்தப்பட்ட கற்பிரயோகத்தில் காயமடைந்த கடற்படையின் 12 உறுப்பினர்கள் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுர சூரியபண்டார தெரிவித்தார்.

அவர்களில் 4 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

 

 

Related posts

அதிவேக நெடுஞ்சாலையின் சில இடங்களுக்கு தற்காலிகமாக பூட்டு

அமித் ஜீவன் வீரசிங்க மற்றும் 9 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானம்!