உள்நாடு

காஸா சிறுவர் நிதியத்துக்கான நிதி பற்றி ஐ.தே.க வின் வேண்டுகோள் !

காஸா சிறுவர் நிதியத்துக்காக சேர்க்கப்படும் நன்கொடை எதிர்வரும் ஏப்ரல் 11ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளதாகவும் . நன்கொடை செய்ய விரும்புபவர்கள் அதற்கு முன்னர் நன்கொடைகளை கையளிக்குமாறும் ஐக்கிய தேசிய கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார இந்த வேண்டுகோளை விடுத்தார்.

காஸாவில் போரில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களை கருத்திற்கொண்டு காஸா சிறுவர்களுக்கான நிதியம் அமைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

எதிர்வரும் ரமழான் பண்டிகையின் போது காஸா சிறுவர்களுக்கு நிதி உதவி வழங்குவததை இலக்காக கொண்டே இந்த நிதியம் அமைக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்த நிதியத்துக்கு பங்களிப்பு செய்யும் வகையில் அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்கள் எதிர்வரும் ரமழானில் இப்தார் நிகழ்ச்சிகளை நிறுத்தி, அந்த பணத்தை இந்த நிதியத்துக்கு பங்களிப்பு செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இந்த நிதியத்திற்கு பங்களிப்பு செய்ய தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் முன்வர வேண்டும். ஒரு மில்லியன் டொலரை நன்கொடையாக வழங்குவதற்காக நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

எனவே காஸா சிறுவர் நிதியத்துக்குப் பங்களிப்பு செய்ய விரும்புபவர்கள் ஏபரல் 11ஆம் திகதிக்கு முன்னர் தங்களது நன்கொடைகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

Related posts

புதிய விளையாட்டுச் சட்டத்தை அறிமுகம் செய்வதற்கான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

கொரோனா வைரஸ் – விஞ்ஞான ரீதியான முறைமையினை பின்பற்றுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

தபால் மூல வாக்களிப்பு தொடர்பான தகவல்