உலகம்

காஸா எல்லைக்கு வருமாறு எலான் மஸ்க்குக்கு ஹமாஸ் அமைப்பு அழைப்பு!

(UTV | கொழும்பு) –

காஸா எல்லை பகுதிக்கு வந்து, இஸ்ரேல் செய்திருக்கும் வேலைகளையும் பாருங்கள் என எலான் மஸ்க்க்கு ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

“காஸா எல்லைக்கு வந்து, காஸா மக்களுக்கு எதிராக செய்யப்பட்டுள்ள அழிப்பு நடவடிக்கைகளை கண்கூடாக பார்த்து தெரிந்து கொள்ள அவரை நாங்கள் அழைக்கிறோம். 50 நாட்களுக்குள் பாதுகாப்பில்லா காஸா மக்கள் வீடுகளின் மீது 40 ஆயிரம் டன் வெடிபொருட்களை இஸ்ரேல் கொட்டித்தீர்த்துள்ளது.” “மேலும் இஸ்ரேல் உடனான உறவை நீட்டிப்பது குறித்தும், அவர்களுக்கு ஆயுதங்களை வழங்குவது குறித்தும் அமெரிக்கா பரிசீலனை செய்ய வேண்டும்,” என்று ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் ஒசாமா ஹம்டன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இஸ்ரேலுக்கு சென்றிருந்த எலான் மஸ்க், ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தார். மேலும் வெறுப்பு பரவுவதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சவுதி இளவரசர் மன்னரை கொல்லவும் திட்டமிட்டிருந்தார்

உலக அளவில் சுகாதார அவசர நிலையாக பிரகடனம்

டெல்லி விவசாயிகளுக்கு மியா கலீபா ஆதரவு