உலகம்

காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்தும் வான்வெளி தாக்குதல்

(UTV | காஸா) – இஸ்ரேலுக்கு அருகே ஹமாஸ் கட்டுப்பாட்டின் கீழ் வரும் காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து மூன்றாவது நாளாக வான்வெளி தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் படை ராக்கெட் தாக்குதலை நடத்தியதாக கூறி, இஸ்ரேல் இந்த பதில் தாக்குதல்களை நிகழ்த்தி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் அருகே பாலஸ்தீன மக்கள் வசிக்கும் காஸா பகுதி மீண்டும் கொளுந்துவிட்டு எரிய தொடங்கி உள்ளது. இந்த காஸா பகுதியை புரட்சி குழுவான ஹமாஸ் கட்சி 2005ல் கைப்பற்றியது.

சில உலக நாடுகள் ஹமாஸ் கட்சியை தீவிரவாத அமைப்பு என்றும், சிலர் அரசியல் கட்சி என்றும், சிலர் புரட்சி குழு என்றும் அழைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக பாலஸ்தீன ஆக்கிரமிப்பு நிலத்தை விட்டு இஸ்ரேல் வெளியேற வேண்டும். வெஸ்ட் பேங்க் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மீண்டும் பாலஸ்தீன மக்களின் கட்டுப்பாட்டின் கீழ் வர வேண்டும் என்று ஹமாஸ் குழு தீவிரமாக போராடி வருகிறது.

Related posts

அவுஸ்திரேலியா அனுமதி

காசா நகரத்தில் இருந்து வெளியேறும் பொதுமக்கள்!

கிரிப்டோகரன்சியில் அமெரிக்காவை முந்திய இந்தியா