உள்நாடு

காஸாவிற்கான சிறுவர் நிதியத்தை அமைக்க அமைச்சரவை அனுமதி!

காஸாவிற்கான சிறுவர் நிதியமொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

காஸாவில் இடம்பெற்ற மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.

இந்த ஆண்டுக்கான இப்தார் கொண்டாட்டத்திற்காக அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கும் மேற்கொள்ளப்பட்டிருந்த நிதி ஒதுக்கீட்டை இந்த நிதியத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாகவும் வழங்கவுள்ளது.

நன்கொடையாளர்களும் அதற்கு பங்களிக்க முடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

சாதாரண தர பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

வடக்கு பிரதேச மரம் நடுகை விழா!

Breaking News : ஜனக ரத்நாயக்க ஜனவுக்கு எதிரான வாக்கெடுப்பு நிறைவு : தோல்வியுடன் விடைபெற்றார் ஜனக!