விளையாட்டு

காளி பூஜை : விளக்கமளித்தார் ஷகீப்

(UTV | பங்களாதேஷ்) – பங்களாதேஷ் கிரிக்கெட்டின் சகலதுறை வீரர் ஷகீப் அல் ஹனுக்கு முகநூல் நேரலையில் இளைஞர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி பங்களாதேஷின் சில்ஹெட்டில் உள்ள ஷாப்பூர் பகுதியைச் சேர்ந்த மொஹ்சின் என்ற இளைஞர் தனது முகநூல் நேரலையில்,

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகீப் அல் ஹசனை கடுமையாக விமர்சித்து, ஷகிப் இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்தியிருக்கிறார். அவரைத் துண்டு துண்டுகளாக வெட்டுவேன். ஷகிப்பைக் கொல்ல சில்ஹெட்டிலிருந்து டாக்காவுக்குச் செல்வேன் என்று கையில் அரிவாளுடன் மிரட்டல் விடுத்தார்.

இந்த விவகாரம் நடந்த சில மணிநேரங்களில் அது பொலிசாரின் கவனத்துக்குச் சென்றது. கூடவே, ஷகீப் அல் ஹசனுக்கும் இந்த விடயம் தெரியவர, விவகாரம் பெரிதானது.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில் நவம்பர் 12 அன்று ஷகீப், பெலேகாட்டா பகுதியில் காளி பூஜையை துவக்கிவைக்க கொல்கத்தா சென்றதாக கூறப்படுகிறது.

மேலும், காளி சிலையின் முன்பு வழிபடுவது போன்ற புகைப்படங்களும் வெளியாகவே இஸ்லாமியர்கள் மனதை ஷகீப் புண்படுத்திவிட்டார் என்று சர்ச்சை ஏற்பட்டது.

இதற்கிடையே, நேற்று சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஷகிப், வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்தார்.

அதில், மதத்தைச் சுற்றி பேச்சுக்களோ செயல்களோ இல்லாத சுமார் 40 – 45 நிமிடங்கள் வரை மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேனே தவிர காளி பூஜையை துவக்க போகவில்லை.

எனினும், நிகழ்ச்சி முடிந்து காரில் ஏறவிருந்தபோது, காளி பூஜையில் மெழுகுவர்த்திகளை மட்டுமே ஏற்றி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டேன். நான் ஒரு பெருமைமிக்க இஸ்லாமியர் என்று விளக்கம் கொடுத்தார்.

தற்போது இந்த விவகாரம் அவதூறு மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்தை அழிக்கும் முயற்சி என்பாதாக கூறி வழக்கு பதிந்துள்ளனர்.

ஆனால், சில மணி நேரங்களில் மீண்டும் நேரலைக்கு வந்த இளைஞர் மொஹ்சின் தனது நடத்தைக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாபர் அசாம் தலைமையில் நாளை பாகிஸ்தான் அணி இலங்கைக்கு

இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக சமிந்த

பங்களாதேஷ் அணி வீரர்களின் போராட்டம் நிறைவு