உள்நாடு

கால்நடைகளை வேட்டையாடிய முதலையை நள்ளிரவில் மடக்கிப் பிடித்த மக்கள்

நள்ளிரவில் சுமார் 16 அடி நீளமான முதலையொன்று பொதுமக்களால் உயிருடன் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு புளியந்தீவு வாவிக்கரை வீதி – 2 இல் இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு வாவியில் சஞ்சரித்த குறித்த முதலை நேற்று (29) ஞாயிற்றுக் கிழமை கரைக்கு வந்துள்ளதுடன் புளியந்தீவு கிராமத்திற்குள் நுழைய முற்பட்ட போது இதனை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் குறித்த முதலையை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக குறித்த பகுதியில் மேய்ச்சலில் ஈடுபடும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை குறித்த முதலை வேட்டையாடியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிப்பதுடன், குறித்த பகுதியில் உள்ள வாவியில் இம்முதலை சஞ்சரிப்பதனால் மீனவர்கள் தமது ஜீவனோபாயத்தை முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும், குறித்த முதலையை முதலைகள் சரணாலயத்திற்கு அனுப்பி வைக்குமாறு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இதற்கு முன்னதாக, குறித்த வாவிக்கு அருகில் வவுணதீவு பகுதியில் ஒருவரை முதலை பிடித்ததனால் அவர் இறந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

குஜராஜ் பால விபத்து : ஜனாதிபதி கவலை

கொரோனா வைரஸூக்கு சிகிச்சையளித்த 15 தாதியர்கள் வெளியேற்றம்

QR குறியீட்டு முறையின் ஊடாக எரிபொருள் விநியோகம் இன்று முதல்