விளையாட்டு

கால்இறுதி ஆட்டம் நாளை

(UTV|RUSSIA)-உலக கிண்ண கால்பந்து திருவிழா கடந்த 14 ஆம் திகதி தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றன.

கடந்த 28 ஆம் திகதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் போட்டியை நடத்தும் ரஷ்யா, உருகுவே, ஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்ஸ், டென்மார்க், குரோஷியா, அர்ஜென்டினா, பிரேசில், சுவிட்சர்லாந்து, சுவீடன், மெக்சிகோ, பெல்ஜியம், இங்கிலாந்து, கொலம்பியா, ஜப்பான் ஆகிய 16 நாடுகள் 2 வது சுற்றுக்கு தகுதி பெற்றன.

நடப்பு சாம்பியன் ஜெர்மனி, எகிப்து, சவுதி அரேபியா, ஈரான், மொராக்கோ, பெரு, அவுஸ்திரேலியா, நைஜீரியா, ஐஸ்லாந்து, செர்பியா, கோஸ்டாரிகா, தென்கொரியா, துனிசியா, பனாமா, செனகல், போலந்து ஆகிய 16 அணிகள் தொடக்க சுற்றிலேயே வெளியேறின.

2 வது சுற்று ஆட்டங்கள் நேற்று முடிவடைந்தன. இதன் முடிவில் பிரான்ஸ், உருகுவே, ரஷியா, குரோஷியா, பிரேசில், பெல்ஜியம், சுவீடன், இங்கிலாந்து ஆகிய 8 நாடுகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன.

முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல், டென்மார்க், மெக்சிகோ, ஜப்பான், சுவிட்சர்லாந்து, கொலம்பியா ஆகிய அணிகள் 2 வது சுற்றில் வெளியேற்றப்பட்டன.

கால்இறுதி ஆட்டங்கள் 6 ஆம் திகதி தொடங்குகிறது. அன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் பிரான்ஸ் – உருகுவே, பிரேசில் – பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.

7 ஆம் திகதி நடைபெறும் கால்இறுதிகளில் இங்கிலாந்து – சுவீடன், ரஷ்யா – குரோஷியா அணிகள் மோதுகின்றன.

அரையிறுதி ஆட்டங்கள் 10 மற்றும் 11 ஆம் திகதியும், இறுதிப்போட்டி 15 ஆம் திகதியும் நடைபெறும்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மகளிர் பிக் பேஷ் அட்டவணை வெளியாகியது

பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஓய்வு…

தனது அடுத்த இலக்கு இதுவே