உள்நாடு

காலி வீதியில் விசேட போக்குவரத்து திட்டம்

(UTV | கொழும்பு) –  கல்கிஸையில் இருந்து காலி வீதியூடாக சுதந்திர சதுக்கம் வரையில் இன்று(25) பிற்பகல் 1 மணி முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அமரபுர பிரிவின் உன்னத மஹாநாயக்க சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதி கிரியைகள் இடம்பெறவுள்ள காரணத்தினால் இவ்வாறு போக்குவர்த்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

இன்று (25) பிற்பகல் 1 மணிக்கு அவருடைய உடல் கல்கிஸ்ஸ தர்மபால விகாரையில் இருந்து வாகன பேரணி ஊடாக எடுத்துவரப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு சுதந்திர சதுக்கத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே வாகன சாரதிகள் குறித்த தருணத்தில் மாற்று வீதிகளின் ஊடாக பயணிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

ஜனாதிபதி தலதா மாளிகைக்கு

ஒரு லீட்டர் டீசல் விலை ரூ.10 இனால் குறைக்கப்படும்

நாமல் குமார தொடர்ந்தும் விளக்கமறியலில்