உள்நாடு

காலியில் இராஜாங்க அமைச்சர் சானக்கவின் மாமனார் சுட்டுக் கொலை!

(UTV | கொழும்பு) –

பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்கிடையிலான மோதலின் காரணமாகவே இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்கவின் மாமனாரான வர்த்தகர் லலித் வசந்த மென்டிஸ், காலியில் அவரது காரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட வர்த்தகர் ரத்கம விதுர என்ற பாதாள உலகக் குழுத் தலைவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, ரத்கம விதுர மற்றும் கொஸ்கொட சுஜீக்கு இடையில் கடும் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். காலி நகரின் மிகப் பெரிய ஜவுளிக் கடையின் உரிமையாளரான லலித் வசந்த மெண்டிஸ், தனது வியாபார நிலையத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, காலி டிக்சன் வீதியில் வைத்து இனந்தெரியாத இரு நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேல் மாகாணம் அதிக அபாயமுள்ள வலயமாக பிரகடனம்

திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்களுக்கு பூட்டு

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் ஐ.நா அவதானம்