உள்நாடு

காலிமுகத்திடல் மக்கள் போராட்டத்திற்கு இன்றுடன் 100 நாட்கள்

(UTV | கொழும்பு) – காலிமுகத்திடல் மக்கள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று (17) 100 நாட்கள் பூர்த்தியாகின்றன.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அப்போது ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் இந்த பொதுப் போராட்டம் நடத்தப்பட்டது.

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற அமைதியான பொதுப் போராட்டங்களை ஒன்றிணைத்து கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பொதுப் போராட்டம் தொடர்ந்து 100 நாட்களைக் கடந்துள்ளது.

இந்தப் போராட்டத்தின் காரணமாக இலங்கையின் அரசியல் களத்தில் பல பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு அதன் உச்சக்கட்டத்தைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 14ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்தார்.

அத்துடன் கடந்த ஜூலை 9ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் பெருந்திரளான மக்கள் ஒன்று திரண்டு இந்த மாபெரும் மக்கள் போராட்டமானது இந்நாட்டில் அதிகளவான மக்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட அமைதியான பொதுப் போராட்டமாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளதுடன் சர்வதேச ரீதியிலும் பாராட்டப்பட்டது. .

Related posts

நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டன

ஓய்வு பெற்ற தாதியர்களை தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில்

“மத்திய வங்கியை இரத்து செய்யவும், இன்றேல் IMF கடன்களும் சாக்கடையில் வீசப்பட்டது போன்றுதான்”