உள்நாடு

‘காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருக்க வேண்டும்’

(UTV | கொழும்பு) – காலிமுகத்திடல் மக்கள் போராட்டத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோசங்கள் இடம்பெறாதது குறிப்பிடத்தக்க பாரிய குறைபாடு என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் அரசியல் சபை உறுப்பினர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த, தேர்தலை கோரும் கோசங்கள் எதுவும் ஆர்ப்பாட்டத்தில் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

ராஜபக்சவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே மக்கள் போராட்டத்தின் முக்கிய குறிக்கோள் என லால்காந்த கூறினார்.

மக்கள் போராட்டத்தின் மூலம் பாராளுமன்றத்தை தோற்கடிக்க வேண்டும் என்ற அழைப்பு விடுக்கப்படவில்லை என்றார்.

மக்கள் போராட்டமானது தேசிய மக்கள் சக்தியின் தரப்பினரை மாத்திரம் கொண்டதல்ல, அது ஒரு கூட்டமைப்பினால் உருவாக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இப்போராட்டம் பாராளுமன்றம் தொடர்பான எந்தவொரு விடயத்திலும் கவனம் செலுத்தவில்லை என்றும், “வீட்டிற்குச் செல் கோட்டா” என்பதே பிரதான முழக்கம் என்றும் அவர் கூறினார்.

Related posts

நீர் கட்டணம் செலுத்தாதோர் விசேட அறிவித்தல்

இலங்கை விமானப்படைக்கு, இந்தியா வழங்கிய விமானம்!

கபூரியாவைப் பாதுகாப்போம் – கவனயீர்ப்பு போராட்டம்