கேளிக்கை

‘காலா’ படத்தின் முக்கிய அப்டேட்

(UTV|INDIA)-பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. `கபாலி’ படத்திற்கு பின்னர் ரஜினிகாந்த் – பா.ரஞ்சித் மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. `கபாலி’ படத்தை தொடர்ந்து ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

சென்னை, மும்பை பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இதையடுத்து ரஜினி தற்போது அவரது ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
இதற்கிடையே ‘காலா’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் பூஜையுடன் இன்று தொடங்கியிருக்கிறது. இதில் படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில், ரஜினி ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடிக்கிறார். நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே,  அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா என ஒரு நட்சத்திரப் பட்டாளடே நடித்துள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்த படம் 2018 ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

கரீனா கபூர் நிறைமாத கர்ப்பிணியாக

திருமண வரவேற்புக்கு வந்து வாழ்த்திய பிரதமர் மோடிக்கு பிரியங்கா சோப்ரா நன்றி

தீபிகாவுக்கும், ஜோக்கோவிச்சுக்கும் கள்ளத்தொடர்பு – முன்னாள் காதலி