வணிகம்

காலாவதியான பேக்கரி உற்பத்தி பொருட்கள் மீட்பு

(UTV|கொழும்பு) – 17,500 கிலோ கிராம் பெறுமதியான காலாவதியான கேக் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களை வத்தளை பகுதியில் இருந்து நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

பிரபலமான பேக்கரி உணவு பொருட்களை தயாரிக்கும் நிலையத்தில் இருந்தே இவ்வாறான காலாவதியான உணவு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைபப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி 15 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுளள்ளது.

இந்த சுற்றிவளைப்பை முன்னெடுக்கும் வேளையில் குறித்த பொருட்களில் குறிப்பிடப்பட்டிருந்த காலாவதி திகதி அகற்றப்பட்டு புதிய திகதி உணவு பொருட்களில் ஒட்டப்பட்டு கொண்டிருந்தாக நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

குறைவடைந்துள்ள மரக்கறிகளின் விலை

பீட்ஸ் ஆஃப் ஒன் நேஷன் – சீசன் 2

யாழ். தங்கத்தின் விலையில் வீழ்ச்சி