வகைப்படுத்தப்படாத

காலநிலை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் மேற்று, சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில பிரதேசங்களில் மணிக்கு சுமார் 50 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பெய்யக்கூடும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பிற்பகல் 2.00 மணியின் பின்னர் பெய்யும்.

வடமாகாணத்தில் பலமான காற்று மணிக்கு சுமார் 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து ,காலி, பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு கடற்பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தால் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கனேடிய பிரதமர் இந்தியா விஜயம்

යෝෂිත – නිතීෂා යුවලට සුබ මංගලම්