சூடான செய்திகள் 1

காலநிலையில் மாற்றம்

(UTV|COLOMBO)-எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பல பாகங்களிலும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கு அதிகளவான மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, களுகங்கை பெருக்கெடுக்கும் பகுதிகளில் பெய்த மழைக்காரணமாக கங்கையின் நீர்மட்டம் இரத்தினபுரி மற்றும் மில்லகந்த பகுதிகளில் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மத்திய மலைநாட்டில் பெய்த கடும் மழைக்காரணமாக லக்ஷபான மற்றும் மேல் கொத்கொத்மலை நீர்தேக்கங்களின் வான்கதவுகள் தலா மூன்று வீதம் திறக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, காசல்ரீ, மவுசாக்கலை மற்றும் விமலசுரேந்திர ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.

அதேநேரம், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை – தியலகல பகுதி ஏற்பட்டிருந்த மண்சரிவு தற்போது சீர்செய்யப்பட்டுள்ளது.

எனினும் தொடர்ந்தும் மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு காவற்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அதேநேரம் தலவாக்கலை – நாவலபிட்டி பிரதான வீதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

அகலக் கால் விரிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 7 தவிசாளர்களையும் 5 பிரதித் தவிசாளர்களையும் தனதாக்கியது.

ரஞ்சனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு [VIDEO]

கிஹான் பிலபிட்டிய மீதான விசாரணை அறிக்கையை ஆராய 5 பேர் கொண்ட குழு நியமனம்