சூடான செய்திகள் 1

காலநிலையில் திடீர் மாற்றம்

(UTV|COLOMBO)-வடக்கு ,வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில பிரதேசங்களில் இன்றும் வெப்பமான காலநிலையை எதிர்பார்க்க முடியும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு அமைவாக வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, பொலனறுவை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலுள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.பிரேமலால் தெரிவித்தார்.

இன்னும் சில தினங்களில் தென்மேற்கு பருவமழை பெய்ய ஆரம்பிக்கும் என்றும், அதனை தொடர்ந்து வெப்ப நிலை தணியக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்ப காலநிலையின் போது கூடுதலாக நீரை பருகுவது முக்கியமானதாகும் என்று சுகாதார சேவைகள்  பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தேசபந்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணையை வலுவற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை

மைத்திரியை அழைக்க தயாராகிய CID!