வகைப்படுத்தப்படாத

காலநிலையில் திடீர் மாற்றம்!! பொதுமக்களே அவதானம்!!!

(UTV|COLOMBO)-நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஓரளவு மழைபெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் காலி மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ஏனைய பிரதேசங்களில் சீரான காலநிலை நிலவும்.

மேற்கு , சப்ரகமுவ, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் காலைவேளைகளில் பனிமூட்டம் காணப்படக்கூடும்.

 

மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு வரையான கடற்கரையோர பிரதேசங்களில் ஓரளவு மழைபெய்யும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து

இமயமலைக்கு ஏற்படப் போகும் பேரழிவு?

Three faculties at Ruhuna Uni. to be reopened tomorrow