உள்நாடு

காற்றில் பிளாஸ்டிக் துகள்களின் செறிவு அதிகரிப்பு

(UTV|கொழும்பு) -கொழும்பு மற்றும் கண்டி உள்ளிட்ட நகரங்களில் வளிமண்டலத்தில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள் படிமங்களின் செறிவு அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலாம் தெரியவந்துள்ளது

மைக்ரோ பிளாஸ்டிக் துகள் படிமங்களின் செறிவு அதிகரிப்பதால் பாரிய சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும் என பட்டப்படிப்பிற்கான கற்கை நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் பிட்டவல தெரிவித்துள்ளார்

மிக நுண்ணிய அளவில் இந்தத் துகள்கள் காணப்படுவதால், சில சந்தர்ப்பங்களில் அவை சுவாசத்தினூடாக உட்செல்லக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த இரு வாரங்களாக கொழும்பு நகர வளிமண்டலத்தில் தூசுக்களின் செறிவு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

எனினும் இடைக்கிடையே நிலவும் மழையுடனான வானிலையால் தூசுக்கள் கட்டுப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது .

Related posts

LAUGHS மற்றும் LITRO எரிவாயு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

SLMC எம்பி பதவியை இழக்கும் நஸீர் அஹமட்!

காலி முகத்திடல் போராட்டத்திற்கு 9வது நாள்