சூடான செய்திகள் 1

காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

(UTV|COLOMBO)  மாத்தறையில் இருந்து அம்பாந்தோட்டை வரையான கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் அந்த கடற்பகுதிகளில் காற்றின் வேகம் இடைக்கிடையே மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதனுடன் திருகோணமலையில் இருந்து புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கடற்கரைக்கு அப்பாலான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும்.

அது தொடர்பில் கடற்றொழில் மற்றும் கடற்படை சமூகமும் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

”நான் ராஜபக்ஷ இல்ல ரணில்” தமிழ் தலைவர்களை சந்தித்த ரணிலின் முக்கிய விடயங்கள்

இலங்கை தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு.

editor

பிரதமர் தலைமையில் ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிர்மாணப் பணி அடிக்கல் நாட்டும் நிகழ்வு