கிசு கிசு

கார் கதவை தானே சாத்திய இளவரசி மேகன் மார்க்கல்…

(UTV|LONDON)-நாம் காரில் இருந்து இறங்கியவுடன், கார் கதவை நாமே சாத்துவது அனிச்சை செயலான ஒன்று.

ஆனால், இங்கிலாந்து இளவரசி மேகன் மார்க்கல், கார் கதவை அவரே சாத்தியது, இங்கிலாந்து மக்களை அதிர்ச்சியிலும், பிரமிப்பிலும் ஆழ்த்தி உள்ளது. இங்கிலாந்து பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாகவும் ஆகி உள்ளது.

ஏனென்றால், பாதுகாப்பு காரணங்களுக்காக, அரச குடும்பத்தினர், கார் கதவை தாங்களே சாத்துவது இல்லை.

இளவரசர் சார்லஸின் மகன் இளவரசர் ஹாரியை மணந்தவர்தான், மேகன் மார்க்கல். அவருக்கு வயது 37. அமெரிக்க நடிகையாக இருந்தவர்.

சமீபத்தில், லண்டனில் ஒரு கண்காட்சி திறப்பு விழாவுக்கு தனது கருப்பு நிற காரில் அவர் வந்தார். அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இளவரசியை கைகுலுக்கி வரவேற்ற ஒருவர், அவரது கார் கதவை மூட முனைந்தார். அந்த வினாடி, சற்றும் எதிர்பாராமல், இளவரசியே கார் கதவை சாத்தி விட்டார். அந்த நபர், கையை சடாரென்று விலக்கிக்கொண்டு, ஆச்சரியத்தில் வாய் பிளந்தார்.

இந்த நிகழ்வுதான், புகழ்பெற்ற பி.பி.சி., சன், டெய்லி மெயில் உள்ளிட்ட ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்துள்ளது. இந்த வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது. அத்துடன், நாடு முழுவதும் விவாதப்பொருளாகவும் ஆகி உள்ளது.

இங்கிலாந்து அரச குடும்பத்தினரின் ஒவ்வொரு அசைவையும் கவனிப்பதற்கு என்றே ஒரு சாரார் இங்கிலாந்தில் உள்ளனர். அவர்கள், இளவரசி மேகன் மார்க்கலையும் கவனித்து வருகிறார்கள். அவர் எவ்வித பாசாங்கும் இல்லாமல், எளிமையாக இருப்பார் என்று அவர்கள் கணித்துள்ளனர்.

அரண்மனை தொடர்பான செய்திகளை சேகரிக்கும் பத்திரிகையாளர்களில் ஒருவர், “வெல்டன் மேகன்” என்று எழுதி உள்ளார். மற்றொருவர், “இளவரசி மேகன் எந்த மரபையும் மீறவில்லை. அவர் பழக்க தோஷத்தில்தான் கதவை மூடி உள்ளார்” என்று எழுதி உள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

எனக்கு டொலரை உழைப்பதற்கான திறமையில்லை

ரஞ்சனுக்கு ஜம்பர்.. வெளி உணவுக்கு தடை.. வெளியாட்களை பார்க்க தடை

இன்ஸ்டாகிராம் ப்ரோஃபைல் பக்கம் மாற்றம்?