உள்நாடு

கார் ஒன்றின் மீது போலீசார் துப்பாக்கி பிரயோகம்

(UTV | பொல்கஹவெல) – கார் ஒன்றின் மீது போலீசார் துப்பாக்கி பிரயோகம்

பொல்கஹவெல நீதிமன்றத்திற்கு அருகில், உத்தரவை மீறிச் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெரோயின் போதைப்பொருளை கடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று காரை நிறுத்த முற்பட்டுள்ளனர்.

ஆனால் பொலிஸ் அதிகாரிகளை மீறி காரை ஓட்டிச் சென்றதால், ​​பொலிஸார் காரை நோக்கிச் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் காரின் டயருக்கு சேதம் ஏற்பட்டது.

சுமார் ஒரு கிலோ மீற்றர் வரை சென்ற காரை பொலிஸார் பின் தொடர்ந்து சென்று தடுத்து நிறுத்தி, அதில் இருந்த மூவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காருக்குள் ஒரு மாத கைக்குழந்தை, ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை கையளிக்குமாறு அறிவிப்பு

editor

உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை

அடுத்த மாதம் முதல் தபால் கட்டணங்களில் திருத்தம்