உள்நாடு

காயமடைந்த இந்திய மீனவர்களை பார்வையிட்ட யாழ். இந்திய துணைத்தூதுவர்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்தனர்.

காயமடைந்த இருவரும் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்களுடன் படகொன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டது.

இந்திய மீனவர்களின் படகில் ஏறி அவர்களை கைது செய்ய கடற்படை வீரர் முயற்சித்துள்ளார். இதன்போது கடற்படை வீரரை ஏற்றிக்கொண்டு மீனவர்களின் படகு தப்பிச்செல்ல முற்பட்டுள்ளது.

இதனையடுத்து ரோந்து படகில் சென்ற இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இந்திய மீனவர்கள் இருவர் காயமடைந்தனர்.

கைதான இந்திய மீனவர்களை கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் பொறுப்பேற்க மறுத்துள்ள நிலையில், பருத்தித்துறை பொலிஸாரிடம் இந்திய மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

காயமடைந்த இந்திய மீனவர்களை யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி பார்வையிட்டுள்ளார். குறித்த மீனவர்களை நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

-பிரதீபன்

Related posts

அரசாங்கத்திற்கு கூட்டுறவுச் சங்கத் தேர்தல்கள் ஊடாக மக்கள் பதிலளிக்க ஆரம்பித்துள்ளனர் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

இஸ்ரேலில் கொல்லப்பட்ட இலங்கைப் பெண் குறித்து வெளியான தகவல்!

அரசுக்கு ஆதரவு வழங்கிய மூவர் எதிர்கட்சியில் அமர்ந்தனர்