கிசு கிசுகேளிக்கை

காப்பான் படத்தில் சூப்பர் ஸ்டாரை தாக்கி வசனம்? (VIDEO)

(UTV|INDIA) நடிகர் சூர்யா நடிப்பில் காப்பான் படத்தின் டீஸர் இன்று வெளிவந்து இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் மோஹன்ளலாலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

இன்று வெளியான டீசரில் “போராடுறதே தப்புனா, போராடுற சூழ்நிலையை உருவாக்குனதும் தப்பு தான்” என சூர்யா வசனம் பேசியிருப்பார்.

அது நடிகர் ரஜினியை விமர்சிக்கும் வகையில் உள்ளது என பலரும் கூறி வருகின்றனர். ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது பேசிய ரஜினி, “எதெற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும்” என ரஜினி கூறியது உங்களுக்கு நினைவிருக்கும்.

அதை விமர்சித்து தான் காப்பான் படத்தில் இப்படி ஒரு வசனம் வந்துள்ளது.

 

Related posts

reema lagoo உயிரிழந்தார் – [VIDEO]

காதலரை பாடகராக்கிய லேடி சூப்பர் ஸ்டார்

பிரபல நடிகை சிறையில்