உள்நாடு

கானியா பாரிஸ்டருக்கு எதிரான வழக்கு சாட்சிய விசாரணைக்கு திகதி குறிப்பு

(UTV | கொழும்பு) – சுவிஸ் தூதரக ஊழியர் கானியா பாரிஸ்டர் பிரான்சிஸ் என்பவரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கின் சாட்சியங்களை விசாரணை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் பிரதியொன்றை இன்று திறந்த நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கையளிக்க சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த முறைப்பாட்டின் முதலாம் மற்றும் இரண்டாவது சாட்சிகளை அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்புமாறும் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வானவேடிக்கைகளினால் வளி மாசு அதிகரிப்பு

தேர்தலுக்கான மாதிரி வாக்குச் சீட்டை வெளியிட்ட ஆணைக்குழு

editor

ஜனாதிபதி செயலகத்திற்கு உள்நுழையும் வீதிகளுக்கு பூட்டு, பலத்த பாதுகாப்பு