உள்நாடுசூடான செய்திகள் 1

காத்தான்குடி பள்ளிவாயலுக்குள் ஜனாதிபதி ரணில்! காசோலையும் கையளிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய காத்தான்குடி அல்-அக்ஸா ஜும்ஆ பள்ளிவாயிலுக்கு இன்று விஜயம் செய்தார்.

இதன் போது பலஸ்தீன் காஸா மக்களுக்காக நடைபெற்ற துஆ பிரார்த்தனையிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார்.

பள்ளிவாயிலுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை
முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் மற்றும் பள்ளிவாயல் நிர்வாகத்தினர் வரவேற்றனர்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், அலி சாஹீர் மௌலானா ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்கா உட்பட பிரமுகர்கள் உலமாக்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது ஜனாதிபதிக்கு பள்ளிவாயல் நிர்வாகத்தினால் அதன் தலைவர் கே.எல். பரீட் பொன்னாடை போர்த்தி கௌரவித்துடன் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி ஜெம்யிய்யத்துல் உலமா சபை காத்தான்குடி மக்களிடம் காஸாவில் உள்ள சிறுவர்களுக்காக சேகரிக்கப்பட்ட 10,769,417 ரூபாவுக்கான காசோலையும் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் விசேட துஆ பிரார்த்தனையை மௌலவி ஏ.ஜி.எம் அமீன் பலாஹி நிகழ்த்தினார்.

Related posts

தொடரும் தொடருந்து பணிப்புறக்கணிப்பு

மொட்டுக்கட்சி வேட்பாளர் யார் ? 7ஆம் திகதி அறிவிப்பு வருமாம்

வஞ்சகமின்றி வலுக்கும் கொரோனா