உள்நாடுபிராந்தியம்

காத்தான்குடி கடலில் நீராடிய மாணவனை காணவில்லை

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடலில் நீராடிய 15வயது பாடசாலை மாணவன் கடல் அலைகளில் அள்ளுண்டு காணாமல் போயுள்ளார்.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (08) இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

தனது ஐந்து பாடசாலை நண்பர்களுடன் காத்தான்குடி நதியா கடற்கரை பகுதியில் நீராடிக் கொண்டிருந்த நிலையிலேயே அலையில் அள்ளுண்டு காணாமல் போயுள்ளார்.

காணமல் போன இளைஞரை தேடும் பணிகள் பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

மேலும் 29 பேர் நாட்டிற்கு வருகை

தேசிய மக்கள் சக்தி எம்.பி நிலந்திக்கு எதிரான அவதூறு பதிவு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

editor

சமந்தா பவர் இலங்கைக்கு