உள்நாடு

காத்தான்குடியில் பெண் ஒருவர் கைது!

(UTV | கொழும்பு) –   காததான்குடி பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரபல போதை பெண் வியாபாரி ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (24) மாலை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்ததுடன் அவரிடமிருந்து ஒரு கிராம் 400 மில்லிக்கிராம் போதை பொருளை மீட்டு ஒப்படைத்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய உதவி பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ. எதிர்மன்னவின் வழிகாட்டலில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஷகி தலைமையிலான பொலிசார்  சம்பவதினமான  நேற்று மாலை குறித்த போதை பொருள் வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டனர்.

இதன்போது வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரபல பெண் போதை வியாபாரியை கைது செய்ததுடன் அவரிடமிருந்து ஒரு கிராம் 400 மில்லிக்கிராம் போதை பொருளை மீட்டனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நீதிமன்ற அவமதிப்புக்கு புதிய சட்டம்

திருகோணமலை எண்ணெய் தாங்கி அபிவிருத்தி : ஒப்பந்தம் நாடாளுமன்றில் முன்வைப்பு

கரையோர புகையிரத சேவை பாதிப்பு