உள்நாடு

“காத்தான்குடியில் காணாமல் போன 10ஆம் ஆண்டு மாணவி- காதலனுடன் கைது”

(UTV | கொழும்பு) –

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  புதிய காத்தான்குடி பிரதேசத்தில் காணமல்போன 10 ஆம் ஆண்டு பாடசாலை மாணவி தனது காதலனுடன் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள தோட்டம் ஒன்றில் வைத்து நேற்று (11) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.றகீம் தெரிவித்தார்.

குறித்த மாணவி தனது காதலன் சகிதம் இருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதுடன் மாணவி தற்போது மேலதிக வைத்திய பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காதலன் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த காதலன் காத்தான்குடியில் கைத்தொழில் நிலையமொன்றினை நடாத்திவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி பிரதேசத்தில் 10 ஆம் ஆண்டு கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவி வீட்டில் படித்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போயிருந்ததாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் நேற்று முன்தினம் (10) முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொதுப்போக்குவரத்துகளில் மட்டு

கொழும்பு – ஷாங்காய் விமான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று- வெல்லப்போவது யார்?