கிசு கிசு

காதலியின் வெற்று மார்பகத்தில், நேரலையில் முத்தமிட்ட பாராளுமன்ற உறுப்பினர்

(UTV | அர்ஜென்டினா) – ஒரு பாராளுமன்ற உறுப்பினர், காதலியின் வெற்று மார்பகத்தில் லைவ்-ஆக முத்தம் வழங்கிய வீடியோ ஒன்று இந்நாட்களில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அர்ஜென்டினா பாராளுமன்ற உறுப்பினர் பெயர் ஜுவான் எமிலியோ. வயசு 47 ஆகிறது. அந்நாட்டின் பெரோனிஸ்ட் என்ற கட்சியை சேர்ந்தவர். சால்டாவை சேர்ந்த பிரதிநிதியும்கூட. இவர்தான் இந்த விவஸ்தை கெட்ட காரியத்தை செய்து வைத்துள்ளார்.

தற்போது கொரோனா காலம் என்பதால், முக்கிய கூட்டங்கள் எங்குமே நடத்தப்படுவதில்லை. அரசியல் ரீதியான கூட்டங்களே என்றாலும் வீடியோ zoom meeting, கான்பரன்ஸ் வழியாகத்தான் நடந்து வருகிறது. அது தற்போதும் அனைத்து தரப்புக்கும் உபயோகமாகவும் உள்ளது.

அந்த வகையில், அர்ஜென்டினாவின் பாராளுமன்ற கூட்டங்கள் zoom app வழியாக நடந்து கொண்டிருந்தது. இது ஓய்வூதிய நிதி முதலீடுகளை பற்றி விவாதிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமாகும். அதில் சில எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர். மேலும் வீடியோ கான்பரன்ஸ் மூலமும் பலர் பங்கேற்றிருந்தனர்.

அந்த சமயத்தில் ஜூவான் எமிலியோ தன் காதலிக்கு திடீரென முத்தம் தந்துவிட்டார். அவரது காதலியின் மேலாடையை டக்கென இழுத்து, மார்பகங்களில் முத்தம் தர ஆரம்பித்துவிடவும், இது அப்படியே நேரலையாக அரசாங்கத்தின் அதிகாரபூர்வ யூடியூப் சேனலில் பதிந்து விட்டது.

இதை பார்த்து எல்லாருமே பதறிப் போய்விட்டனர். இதை பற்றி கேட்டதற்கு, “மீட்டிங் முடிஞ்சிடுச்சு.. கேமராவும் ஆஃப் செய்தாச்சு.. என் காதலி கொஞ்சநாள் முன்னாடிதான் தன் மார்பகத்தை பெரிதாக்கும் ஆபரேஷனை செய்திருந்தாள்.. தன் மார்பகத்தை பார்க்க அவள் விரும்பினாள்.. அதனால் என் அருகில் வந்தாள்.. இதற்குதான் நான் முத்தம் தந்தேன்” என்று பதில் கூறியுள்ளார்.

விளக்கம் அளிக்கப்பட்டாலும், இவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எல்லோரும் வலியுறுத்தியிருந்த நிலையில், அவர் தாமாகவே இராஜினாமா செய்துள்ளார். அந்த இராஜினாமாவை பாராளுமன்றமும் ஏற்று கொண்டது. எனினும், இந்த வீடியோ இன்னமும் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கோட்டா பிரதமராக?

ஏ.ஆர்.ரஹ்மானையே பிரம்மிக்க வைத்த அந்த இளைஞர்!

திரையில் தோன்றும் உணவுப் பொருட்களை, நக்கிச் சுவைக்க வாய்ப்பு