உள்நாடுசூடான செய்திகள் 1

காணி அளவீடு தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

(UTV|கொழும்பு) – நாட்டிலுள்ள அனைத்து காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கைகளை விரைவில் நிறைவுசெய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது காணி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

அடையாளம் காணப்பட்ட மொத்த நில அலகுகளின் எண்ணிக்கை 14 மில்லியன் என்பதுடன், அவற்றில் 10 வீத காணிகளின் அளவீட்டு நடவடிக்கைகள் கடந்த வருடம் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே, எஞ்சிய 90 வீதமான காணிகளின் அளவீட்டுப் பணிகளைஅதிகளவான காலத்தை செலவிடாது விரைவில் நிறைவுசெய்யுமாறும் அதற்கு தேவையான வசதிகளை உடனடியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முறையான கணக்கெடுப்பின் பின்னர், அனைத்து நில அலகுகளுக்கும் உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு காணி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

அளவீட்டுப் பணிகளுக்காக நவீன கண்காணிப்பு உபகரணங்கள் மற்றும் ட்ரோன் கெமராக்கள் உள்ளிட்ட தொழிநுட்ப முறைமைகளை பயன்படுத்துமாறு அவர் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

சவூதி அரேபியா செல்லும் அலி சப்ரி!

வேன் மோதி தந்தையும் மகளும் பலி

ISநபர்களை வழிநடாத்திய புஷ்பராஜ் கைது!