உள்நாடு

காணாமல் போன ஊடகவியலாளரின் உடல் சடலமாக கரை ஒதுங்கியுள்ளது.!

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிறுவர் நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராகப் பணியாற்றிய ஊடகவியலாளர் ஒருவரின் சடலம் இன்று (5) மோதரவுக்கு அருகிலுள்ள கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.

மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்டவர் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த இந்துனில் ஜயவர்தன என்ற ஊடகவியலாளர் என மோதர பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளதுடன், இது தொடர்பில் பிலியந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், சடலம் மோதரை கடற்கரையில் வீசப்பட்ட நிலையில் காணப்பட்டது.

அவர் உயிரிழந்த விதம் மற்றும் காரணத்தை கண்டறிய பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் பிரேத பரிசோதனையின் பின்னர் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என மோதர பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இந்துனில் ஜயவர்தன இலங்கை தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் வெளி விரிவுரையாளராகவும் கடமையாற்றி வருவதுடன், இதற்கு முன்னர் லக்பிம பத்திரிகை, சுவர்ணவாஹினி போன்ற ஊடக நிறுவனங்களிலும் பணியாற்றியவர்.

Leader tamil

Related posts

ஊரடங்கு சட்டத்தை மீறிய 588 பேர் கைது

அறுகம்பே பாதுகாப்பு அச்சுறுத்தல் – நான்கு நாடுகள் பயண எச்சரிக்கை

editor

பெரன்டிக்ஸ் கொவிட் கொத்தணி – விசாரணை செய்ய புதிய குழு நியமனம்