வகைப்படுத்தப்படாத

காணாமல் போனோரின் உறவினர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்..

(UDHAYAM, COLOMBO) – காணாமல் போனோரின் உறவினர்கள் திருகோணமலையில் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியும் இதில் கலந்து கொண்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காணாமல் போனோரின் உறவினர்கள் முன்னெடுக்கும் போராட்டம் தொடர்ந்து இடம்பெறுகிறது.

முல்லைத்தீவில் இடம்பெறும் இந்த போராட்டம் இன்றுடன் 100ம் நாளை அடைந்துள்ளது.

Related posts

එන්ටප්‍රයිස් ශ්‍රී ලංකා අද අනුරාධපුරයේ දී

Windy condition to reduce from today

அகில இலங்கை இந்து குருமார் சங்கத்தின் சதுர்தா வருஷ பூர்த்தி விழா