உள்நாடு

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான தகவல்களை வழங்க தொலைபேசி எண் அறிமுகம்

(UTV|கொழும்பு) – காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல் திரட்டைத் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கான அதிகாரம் தமது அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை அவ்வாறான தகவல் திரட்டு தயாரிக்கப்படவில்லை என காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய தயாரிக்கப்பட்ட தகவல் திரட்டு முழுமையானது அல்லவெனவும் பூரணமான தகவல் திரட்டை தயாரிப்பதற்கு உதவுமாறு பொதுமக்களிடம் சாலிய பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர், கிழமை நாட்களில் காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை தமது அலுவலகத்திற்கு அறிவிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

0112 056 504 மற்றும் 0112 667 108 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடாகவோ அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தலைமை அலுவலகம், கிளை அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று தகவல்களை வழங்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

Related posts

Elon Muskயின் ஸ்டார்லிங்க் வலையமைப்பு இலங்கைக்கு!

சிறைக் கைதிகளை பார்வையிட இன்று முதல் அனுமதி

அரசு தவறினால் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம்