சூடான செய்திகள் 1

காணமற்போன T-56 துப்பாக்கிகள் இரண்டும் மீட்பு

(UTVNEWS | COLOMBO) – பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் இருந்து காணமற்போன T-56 துப்பாக்கிகள் இரண்டும் பொலிஸாரினால் அகுரஸ்ஸ பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

2019 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் திகதி குறித்த துப்பாக்கிகள் இரண்டும் காணாமற் போன சம்பவம் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் குறித்த 2 இராணுவ வீரர்களும் இன்று(10) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட 2 துப்பாக்கிகளும் குற்றப் புலனாய்வுத் பிரிவினரிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

ஜனாதிபதி மற்றும் பிரதமர் இடையே விசேட கலந்துரையாடல்

தேர்தல் தொடர்புடைய முறைப்பாடுகள் 851

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் இரண்டாம் கட்டப் பணி எதிர்வரும் 8ஆம் திகதி முதல்