உள்நாடுபிராந்தியம்

காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் பலி

அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பானாதரகம, தெமட்டகொல்ல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) பெண்ணொருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பானாதரகம, தெமட்டகொல்ல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

குறித்த பெண் தனது வீட்டின் முற்றத்தை தூய்மையாக்கும் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் அம்பன்பொல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வலுவான சர்வதேச கலந்துரையாடல் அவசியம் – ஜனாதிபதி தெரிவிப்பு

உள்ளூர் மசாலாப் பொருட்கள் சலுகை விலையில்

அரச பல் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில்