கேளிக்கை

காட்டு நாய்கள் 14 உடன் மோதும் ஆண்ட்ரியா

(UTV | இந்தியா) – ஜம்போ சினிமாஸ் சார்பில் ஏ.ஸ்ரீதர் தயாரித்துள்ள படம் நோ என்ட்ரி. புதுமுகம் ஆர்.அழகு கார்த்திக் இயக்கியுள்ளார். இவர் எஸ் .ஏ. சந்திரசேகரின் உதவியாளர். இதில் ஆண்ட்ரியா ஷோலோ ஆக்ஷன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். துப்பறிவாளன், விஸ்வரூபம் படங்களில் ஆக்ஷன் வேடத்தில் நடித்திருந்தாலும் இதில் சோலோ ஹீரோயின்.

ஆண்ட்ரியாவுடன் வாகா படத்தின் நாயகி ரண்யா, மும்பை சாக்ஷி, ஜெயஸ்ரீ, சதீஷ் , ஆதவ் கண்ணதாசன், கோகுல் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு ஒளிப்பதிவு ரமேஷ் சக்கரவர்த்தி. அஜிஸ் இசை அமைத்திருக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் அழகு கார்த்திக் கூறியதாவது: மனித நடமாட்டம் இல்லாத ஒரு மலைப்பிரதேசத்தில் ஒரு சொகுசு இடத்தில் தங்குகிறார்கள் இளம் தம்பதிகள். அங்கே மனிதர்களை வேட்டையாடும் 15 நாய்களிடம் அவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த நாய்கள் பத்து சேர்ந்தால் ஒரு யானையையே வீழ்த்திக் கொன்று விடுமளவுக்குக் கொடூரமானவை. நர வேட்டையாடும் நாய்களிடமிருந்து தம்பதிகள் தப்பித்தார்களா இல்லையா என்பதைப் பரபரப்பாகவும் திகிலாகவும் சொல்லும் கதை. உலகில் அதிக மழை பெய்யும் இடமான மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சியில் முழு படத்தையும் எடுத்துள்ளோம். என்றார்.

Related posts

முதலமைச்சராகும் திரிஷா

கணவருக்கு ஜெனிலியா எழுதிய உருக்கமான கடிதம்…

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நான்