கேளிக்கை

காட்டு தீயால் அவதிப்படும் பிரபல நடிகை

(UTV | இந்தியா) – அமெரிக்காவின் போர்ட்லேண்ட் பகுதியில் பரவி வரும் காட்டுத் தீயால், பிரபல நடிகை ரிச்சா கங்கோபத்யா பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மயக்கம் என்ன, ஒஸ்தி போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகை ரிச்சா கங்கோபத்யா தற்போது கணவருடன் அமெரிக்காவின் போர்ட்லேண்ட் பகுதியில் வசித்து வருகிறார்.

அங்கு தற்போது காட்டுத்தீ காரணமாக பெரிய சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அந்த பகுதியில் காற்றின் தரமும் குறைந்து இருக்கிறது.

இது பற்றி டுவிட்டரில் ரிச்சா கூறி இருப்பதாவது: “காற்றின் தரம் இங்கு மிக மோசமாக இருக்கிறது. புகை வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டது. அனைத்து இடங்களிலும் ஏர் பியூரிபையர்கள் விற்று தீர்ந்து விட்டன. நாங்கள் வீட்டிலேயே மூச்சு விட முடியாத நிலையில் இருக்கிறோம். காற்று இல்லாமல் இந்த புகை காரணமாக வரும் தலைவலியுடன் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்” என குறிப்பிட்டிருக்கிறார்.

Related posts

கரீனா கபூர் நிறைமாத கர்ப்பிணியாக

ஷாருக்கான் மகன் ஆர்யன் அறிமுகம்

சன்னி லியோன் தமிழில் அறிமுகமாகும் ‘Oh My Ghost’ [VIDEO]