வகைப்படுத்தப்படாத

காட்டுத்தீயில் சிக்கி 24 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு…

(UTV|CHINA) சீனாவில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 24 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தென்மேற்கு சீனாவின் வனப்பகுதியில் 3800 மீட்டர் நிலப்பரப்பில் உள்ள காட்டில் காட்டுத்தீ வேகமாக பரவியதையடுத்து தகவல் அறிந்த தீயணைப்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.

பல மணி நேரம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. 12 மணி நேரத்தினை கடந்தும் வீரர்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.

காற்று வீசும் திசையில் மாற்றம் ஏற்படவே, தீ மிகவும் வேகமாக அனைத்து இடங்களிலும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் இன்று 2 தீயணைப்பு வீரர்களிடம் அதிகாரிகள் தொடர்பு கொண்டபோது, 24 வீரர்கள் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

 

Related posts

ஜனாதிபதிக்கு 24 வருட சிறை

இடியுடன் கூடிய மழை

National Security Advisory Board appointed